தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன அதில் ஒரு சில படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் அந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென ரசிகர்கள் ஆசைப்படுவது வழக்கம் ஆனால் அது நடப்பதற்கான வாய்ப்புகளை இல்லாமல் இருக்கும் ஐந்து படங்களை பற்றி தான் நாம் திட்ட தெளிவாக பார்க்க இருக்கிறோம்.
1. மங்காத்தா : வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா இந்த படம் அஜித்திற்கு 50-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடித்தனர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருக்கும் இதுல அஜித் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். இந்த படம் அப்பொழுது வெளியாகி 75 கோடி வசூல் செய்து அசத்தியது இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என அஜித் ரசிகர்களுக்கு கேட்டு வந்தாலும் அது நடப்பதற்கான வாய்ப்புகள் தற்போது வரை இல்லாமலேயே இருந்து வருகிறது.
2. ஆரண்ய காண்டம் : இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம் பல்வேறு விருதுகளை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது தியாகராஜன் குமார ராஜாவின் முதல் படம் ஆரணி காண்டம் இந்த படம் நியோ நோயர் என்பது அதிகமான கொலை குற்றங்கள் வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.
3. அந்நியன் : ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் அந்நியன் இந்த படத்தில் விக்ரமுடன் கைகோர்த்து பிரகாஷ்ராஜ், சதா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்களில் விக்ரம் பின்னி படலெடுத்து இருப்பார் இந்த படம் குற்றங்கள் செய்பவர்களுக்கு எதிராக சில கருத்துக்களை எடுத்துரைக்கும் ஒரு படமாக இருந்தது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென பலரும் சொல்லிக்கொண்டு தான் வருகின்றனர் ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இல்லாமல் இருந்து வருகிறது.
4. மருதநாயகம் : உலகநாயகன் கமலஹாசன் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் தான் இருப்பினும் கமலஹாசனுக்கு மருதநாயகம் படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் கனவு ஆனால் இந்த படத்தின் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டது அதன் பிறகு பட்ஜெட் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது இந்த படத்தை எடுத்து விட வேண்டும் என கமலையும் தாண்டி மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகிறது.
5. புதுப்பேட்டை : செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த படம் புதுப்பேட்டை இந்த படத்தில் தனுஷ் தனது மாறுபட்ட நடிப்பு திறமையை வெளிக்காட்டி இருப்பார் அவருடன் கைகோர்த்து சினேகா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடித்திருப்பார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியது இந்த படத்தின் இரண்டாவது பாகத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ஆனால் அதற்கான சாத்திய கூறுகள் இதுவரை இல்லை..