சினிமா துறையை பொறுத்தவரை உடம்பை காட்டினால் தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார் சிம்பு பட நடிகை நிதி அகர்வால். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல் என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை நிதி அகர்வால்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை நிதி அகர்வால் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஜெயம் ரவி நடித்த பூமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் தற்போது கழகத் தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நிதி அகர்வால்.
அடுத்ததாக திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் நிதி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் நடிகை நிதியாளர்கள் தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார் அதாவது சினிமாவில் திறமையை யாரும் மதிக்க மாட்டேங்கிறார்கள் அழகைதான் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் மேலும் உடலை காட்டினால் தான் வாய்ப்பு கிடைக்கிறது என்று கூறியுள்ளார் நிதி அகர்வால்.
பொதுவாக சினிமாவை பொறுத்த வரை 20% மட்டும்தான் திறமையை வைத்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் ஆனால் மீதம் 80 சதவீதம் அட்ஜஸ்ட்மென்ட் இருக்காவும் அழகைப் பார்த்து தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் தற்போது எல்லாம் உடலை காட்டினால் தான் வாய்ப்பு என்ற அளவிற்கு இருக்கிறார்கள் உடலை காட்டாவிட்டால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று நிதி அகர்வால் தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
இதனை அறிந்த சிலர் சினிமா மீதுள்ள ஆர்வமும் ரசனையும் குறைந்து கொண்டே வருவதாக என கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் திறமைக்கு வாய்ப்பு கொடுங்கள் எனவும் கூறி வருகின்றனர்.