திரை உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் படங்களில் நடித்துவிட்டால் அவர்களுக்கு நல்ல காசு வருகின்றார்கள் நன்றாக இருக்கிறார்கள் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையில் ஹீரோ, ஹீரோயின்களை தவிர குணச்சித்திர கதாபாத்திரங்கள், காமெடியன்களுக்கு குறைந்த சம்பளம் தான் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தால் அவர்களின் நிலைமை மாறும்.. இல்லை என்றால் கஷ்டம் தான்..
அந்த நிலையில் தான் காமெடி நடிகர் கூல் சுரேஷ் இருக்கிறார். இப்பொழுது இவருக்கு சினிமா உலகில் பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன இருப்பினும் சிம்பு படத்திற்காக அவ்வப்போது பிரமோஷன் செய்து வருகிறார். அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்திற்காக ப்ரமோஷன் செய்தார் வெந்து தணிந்தது படத்தைப் பார்க்க காரில் வந்து இறங்கினார்.
அப்பொழுது ரசிகர்கள் அவருக்கு நல்லா வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவரது கார் கண்ணாடியும் உடைந்து விட்டது சிம்பு ரசிகர்கள் கூல் சுரேஷ் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டனர் என்ற செய்தி பரவிய நிலையில் கூல் சுரேஷ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிம்பு ரசிகர்கள் காரை உடைக்க வில்லை அவர்கள் எனக்கு கை கொடுக்க வேண்டும் என்கின்ற ஆசையில் தான் கார் மீது ஏறி விட்டார்கள் அதற்காக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் நான் அதை ஏற்கவில்லை..
நான் சினிமாவில் தான் இருக்கிறேன் உங்களை மகிழ்விக்க தான் தியேட்டருக்கு வந்து போகிறேன் அதனால் எனக்கு என்ன பணம் வருகிறதா.. இப்பொழுதும் நான் கஷ்டத்தில் தான் இருக்கிறேன் வாடகை கொடுக்க கூட பணம் இல்லை வண்டி டியூ கட்ட முடியவில்லை என கண்ணீருடன் கூல் சுரேஷ் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு சிம்பு என்னிடம் பேசினார்.
நான் தியேட்டருக்கு போனால் கூட இப்படி ஒரு வரைபடப்பு கிடைக்குமா என தெரியவில்லை ஆனால் உனக்கு கிடைத்திருக்கிறது அதை விட்டு விடாதே எனக்கு கூறினார். மேலும் பேசிய கூல் சுரேஷ் நடிகர் சந்தானம் தான் எனக்கு சோறு போட்டுகிட்டு இருக்கிறார் இத்தனை நாள் சிம்புக்காக தான் இதை செய்தேன் இனிமேல் நான் வரவில்லை என கண்ணீருடன் பேசி உள்ளார்.