விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள் கதிர் மற்றும் முல்லை கேரக்டர்தான்.
இவர்களின் ஒன்ஸ் கிரீன் லவ் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தது. அந்தவகையில் இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகருமான குமரனும், முல்லை கதாபாத்திரத்தில் vj சித்ராவிற்கு பதிலாக தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான காவியாவும் நடித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று மார்ச் 10 அன்று குமரனுக்கு பிறந்தநாள் எனவே இவருடைய ரசிகர்கள் குமரனின் ஸ்பெஷல் டிபி,புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆக்கி வந்தார்கள்.
அந்த வகையில் இவருடைய மனைவி சுபாஷினி மற்றும் இவர்களுடைய மகள் ஆகியோர் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஷூட்டிங் இன் பொழுது அனைவரும் ஒன்றாக இணைந்து குமரனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள்.இந்த வீடியோவை குமரனின் மனைவியே வெளியிட்டுள்ளார்.இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.