எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து வெளிவரவுள்ள திரைப்படம் வலிமை இந்த திரைப்படம் தற்போது உலக அளவில் ரசிகர்கள் எதிர்நோக்கி இருக்கின்றனர். வலிமை திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.
இந்தியாவில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு ஒருபக்கம் அதிகரித்திருக்க மறுபக்கமும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படம் கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மையமாக வைத்து உருவாகி உள்ளதால் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என கூறப்படுகிறது ஏன் சிறந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலருக்கு இந்த படம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்த சிலர் இந்தியாவில் ஒரு மிஷன் இம்பாசிபிள் படமாக இது இருக்கும் என கூறினர். இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது சொல்லப்போனால் இன்னும் 10 நாட்கள் தான் இருக்கிறது வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், இயக்குனருமான ஆதிக் ரவிச்சந்திரன் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட காட்சியை குறிப்பிட்டு திரையரங்கம் அதிரும் என கூறி உள்ளார் அதனால் அந்த காட்சியை திரையரங்கில் ரசிகர்கள் பார்த்து கொண்டாட ரெடியாக இருக்கின்றனர். வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகள் நிறைய இருப்பதால் நிச்சயம் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய இதைப்பார்த்து கிடக்கின்றனர்.
ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பதே சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர் தற்பொழுது ஆதிக் ரவிச்சந்திரன் இப்படி ஒரு மாசான தகவலை சொல்லி உள்ளதால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட அந்த பதிவு இதோ.
Take care of your ear drums 🥁🥁on this scene. Sir’s rage maxxxx💥💥💥💥his eyes🔥🔥🔥🔥 #ValimaiFromFeb24 Going to be celebrating after a longtime #Valimai pic.twitter.com/gMcEKGjAij
— Adhik Ravichandran (@Adhikravi) February 13, 2022