சந்திரமுகி 2 படத்தில் “ரஜினி” நடிக்க மறுத்ததற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா.. வான்டடாக போய் மாட்டிக் கொண்ட ராகவா லாரன்ஸ்.!

rajini
rajini

ரஜினி சினிமா உலகில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றியை பெற்றாலும் மிகப்பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால் பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி இந்த படம் அப்பொழுது வெளியாகி பிரமாண்ட வசூலை அள்ளியோடு மட்டுமல்லாமல் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

ரஜினியின் கெரியரில் பெரிய அளவில் பேசப்பட்ட படமும் சந்திரமுகி தான். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து அதன் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது ரஜினி ஹீரோவாக நடித்த கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் அவருக்கு ஜோடியாக லட்சுமிமேனன் மற்றும் பல பிரபலங்கள் கமிட்டாகி உள்ளனர்.

ஏன் இந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்பது குறித்து ஒரு சின்ன தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்ப்போம். முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது பக்கத்திற்கான கதையை தயார் செய்து அந்த படத்தின் கதையை ரஜினியிடம் இயக்குனர் கூறி உள்ளார். பி வாசு சொன்ன கதை ரஜினிக்கு ரொம்ப பிடித்திருந்ததால் நம்பிக்கை உடன் காத்திருந்தார்.

ஆனால் அப்பொழுது தான் பிரச்சனையே வெடிக்க ஆரம்பித்தது சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தின் கதை கன்னடத்தில் வெளியான அந்திரமித்ரா படத்தின் கதையை தழுவி தான் பி. வாசு எடுத்து இருந்தார். ஆனால் ரஜினிக்காக சில மாற்றங்களை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த படத்தில் சௌந்தர்யா  நடித்திருந்தார் படம் வெளியான சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட்டார்.

சௌந்தர்யா ரஜினி உடன் சேர்ந்து படையப்பா, அருணாச்சலம் போன்ற படங்களில் நடித்துள்ளவர். இந்த படத்தின் இரண்டாவது பாகமான அந்திரா மித்ரா படத்தில் விஷ்ணுவர்தன் நடித்திருந்தார் இந்த படம் வெளியான சில மாதங்களிலேயே அவரும் இறந்துவிட்டார் இப்படியே அந்த படம் எடுக்கும் பொழுது ஒவ்வொருவராக இறப்பதால் ரஜினிக்கு பயம் வந்துள்ளது.

இதனால் தான் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்தால் தனக்கும் ஏதாவது பிரச்சனை வந்துவிடும் என நினைத்து தான் ரஜினி சந்திரமுகி 2 படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சந்திரமுகி முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.