அஜித்துக்கும், விஜய்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. இளைய தளபதி பட்டம் குறித்து பேசி அதிர வைத்த பிஸ்மி

Ajith
Ajith

Ajith : தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் தன்னுடைய ரசிகர்களை மகிழ்விக்க வருடத்திற்கு ஒரு படத்தையாவது கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்.

மகிழ் திருமேனி இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது படத்தின் சூட்டிங் துபாய், அபுதாபி போன்ற இடங்களில் நடக்க இருக்கின்றன முதல் சூட்டிங் வருகின்ற அக்டோபர் மாதம் துவங்கும் என பேச்சுக்கள் அடிபடுகின்றன மேலும் திரிஷா, அர்ஜுன், அர்ஜுன் தாஸ், ஹீமா குருவேஷி போன்றவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி அஜித் மற்றும் விஜய் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. இருவருக்குமே வித்தியாசம் இருக்கிறது அஜித் ஆரம்பத்தில் அல்டிமேட் ஸ்டார் ஆசை நாயகன் என பல பெயர்கள் அவருக்கு ரசிகர்களால் வைக்கப்பட்டது. தீனா படத்தின் போது மகாநதி சங்கர் தல என கூப்பிட்டார்.

இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி இன்றுவரை ரசிகர்கள் செல்லமாக அஜித்தை தல என கூப்பிட்டு வருகிறார்கள். விஜய் காண அடைமொழி அவர்களே கிரியேட் பண்ணிக்கிட்டது. விஜயை ஒரு ஹீரோவாக உருவாக்கியது எஸ்ஏ சந்திரசேகர் பக்கத்துல தான் அவருடைய ஆபீஸ் அங்கு போனாலே ஃபுல்லா விஜயோட போட்டோ பிரிண்ட் பண்ணி லேமினேஷன் பண்ணி இருக்கும்.

அதில் விஜய் கையெழுத்து போட்டு எல்லாம் இருக்கும்..  அந்த சமயத்தில் விஜய் ஒரு படமோ, இரண்டு படமோ தான் பண்ணி இருந்தார். அந்த காலகட்டத்திலேயே இளைய தளபதி என பிரிண்ட் பண்ணி அகில உலக இளைய தளபதி ரசிகர் மன்றம் என பண்ணினார்கள் ஆனால் அப்பொழுது விஜய் – க்கு  ரசிகர்கள் கிடையாது.

அவங்க வீட்டில் வேலை பார்த்தவர்களை தலைவர், செயலாளர் என போட்டு வர்றவங்களுக்கு பிரிண்ட் பண்ணி போட்டு கொடுத்தாங்க இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் இளைய தளபதி பட்டம் இவர்களால் உருவாக்கப்பட்டது. விஜய் தரப்பு தங்களுக்கு தாங்களே சூட்டிக்கொண்டது என கூறினார்.