List off tamil movie in 2024 : 2023 ஆம் ஆண்டு நடிகர்களுக்கு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது. அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் மாஸ் காட்டியது. அடுத்து அட்லீயின் ஜவான் படம் தற்போது வரை மட்டுமே 500 கோடிக்கு மேல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து “லியோ” படமும் வெளிவர இருக்கிறது.
2023ல் போல 2024 ல் பல டாப் ஹீரோ படங்கள் வெளியாக இருக்கின்றன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
தங்கலான் : பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம். முழுக்க முழுக்க தங்க சுரங்கத்தில் மக்கள் பட்ட கஷ்டம் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை படமாக உருவாகி வருகிறது இந்த படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளனர்.
கங்குவா : சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க 70 -களில் நடந்த வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்தும் அதே சமயம் கற்பனைகள் கலந்த படமாக உருவாகி வருகிறது சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
தலைவர் 170 : ஐஸ்வர்யா ரஜினி இயக்கி உள்ள இந்த படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் சார்ந்த ஒரு படமாக உருவாக்கி வருகிறது ரஜினி கேஸ்ட் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 : இந்தியன் படம் வெளிவந்து வெற்றி பெற்றதை தொடர்ந்து ஷங்கர் – கமல் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது கமல் 90 வயது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அவருடன் இணைந்து காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா என பல திரைப் பட்டாளங்கள் நடித்து வருகின்றனர் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி : மகிழ் திருமேனி இயக்கதில் லைகா தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்தில் அஜித் நடிக்கிறார். முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக உருவாக இருக்கிறது படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கின்றன.
தளபதி 68 : லியோ படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர் 171 : லோகேஷ் கனகராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த வருடம் வெளியாகும் என எனக்கு எதிர்பார்க்கப்படுகிறது.