தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து இன்று டாப் இயக்குனராக வரும் ஷங்கர், ஏ ஆர் முருகதாஸ், கௌதமகன் என பலரும் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து உள்ளார்கள். அது பற்றி இங்கு விலாவாரியாக பார்ப்போம்..
ஷங்கர் : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல், அர்ஜுன், விஜய் பண்ற டாப் ஹீரோக்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்து அந்த இவர் தற்பொழுது கமலை வைத்த இந்தியன் 2 என்னும் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறார் இப்படிப்பட்ட ஷங்கர் 1990 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சீதா திரையை படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார்.
பூர்ணிமாவிடம் வேலையை காமித்த காஜி தல.. ரொமான்ஸின் உச்சகட்டம்.. என்னடா நடக்குது இங்க?
கௌதம் வாசுதேவ் மேனன் : 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் தலைக்காட்டி விட்டு போவார் அதன் பிறகு தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு தற்பொழுது பல படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பேரரசு : எதிரும், புதிரும் திரைப்படத்தில் டாக்டராக வந்து நடித்துவிட்டு போவார் அதன் பிறகு தன்னுடைய படங்களில் இயக்கிய அதில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கார் ஷோரூம்க்கு வந்த ரவி, ஸ்ருதி.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
ஏ ஆர் முருகதாஸ் : 1997 ஆம் ஆண்டு வெளியான பூச்சூடவா படத்தில் மணிவண்ணன் உடன் சேர்ந்து ஒரு சின்ன காமெடி பண்ணி இருப்பார் அதன் பிறகு ஒரு சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போல பல இயக்குனர்கள் சினிமா உலகில் தலை காட்டி நடித்து ஒரு கட்டத்தில் பேரையும் புகழையும் கைப்பற்றி தொடர்ந்து முக்கிய மற்றும் சின்ன வேடங்களில் இன்றும் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.