“விக்ரம்” படத்தில் மூன்று வில்லன் கிடையாது.? கமலுடன் மோத போவது மொத்தம் ஏழு வில்லன்கள்.? வெளியே கசிந்த தகவல்.

vikram-movie
vikram-movie

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே இயக்கிருந்தாலும் அவரது படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றதால் பிரபலங்களின் கண்களில் பட தொடங்கினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அந்த வகையில் இவர் தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை எடுக்கும் வாய்ப்பை பெற்றார்.

படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது அதை தொடர்ந்து கமலுடன் தற்போது கைகொடுத்து “விக்ரம்” என்ற திரைப்படத்தை நடித்து வருகிறார். நடிகர் கமல் கண் தெரியாத நபராக நடித்து வருவதாக கூறப்படுகிறது ஆனால் சமீபத்தில் வெளியான கிளான்ஸ் வீடியோ இன்று இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதில் கமலின் கெட்டப் வேற லெவல் இருந்தது மேலும் இந்த படத்தில் கமலஹாசன் உடன் கைகோர்த்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், விஜே மகேஸ்வரி, மைனா நந்தினி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து சில அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது. ஒருபக்கம் புதிய தகவல்கள் இந்த படத்தில் இருந்து ஏதேனும் ஒருவழியில் கசிந்து வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடிக்கிறார் என தெரியவருகிறது.

அவருக்கு மொத்தம் 6 தம்பிகளாக இருப்பார்கள் மொத்தம் உலகநாயகன் கமலஹாசன் ஏழு வில்லன்களுடன் மோதும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் 7 வில்லன்களை கமல் சமாளிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. செம்பன் வினோத் விஜய்சேதுபதியின் சகோதரனாக நடித்துள்ளதாக தெரியவருகிறது.