தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஓடிக்கொண்டிருப்பவர் வெற்றிமாறன். இவர் தனுஷுடன் கைகோர்த்து பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் அந்த வகையில் கடைசியாக தனுஷும், வெற்றிமாறனும் இணைந்த “அசுரன்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடுத்ததை தொடர்ந்து வெற்றிமாறன் விடுதலை என்னும் படத்தை எடுத்துள்ளார்.
இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகின்ற மார்ச் 30 தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இயக்குனர் வெற்றிமாறன் எடுக்கும் படங்கள் அனைத்துமே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது அதனால் இவருடைய படத்தில் காமெடிகள் பெருசாக இருக்காது.
இவர் எடுத்த படத்திலேயே பொல்லாதவன் படத்தில் மட்டும் தான் காமெடிகள் இருக்கும் அது குறித்து அண்மையில் வெற்றிமாறன் சொன்னது என்னவென்றால்.. பொல்லாதவன் திரைப்படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் எனக்கு உடன்பாடு கிடையாது பல கண்ட்றாவியான காட்சிகள் அதில் இருக்கும்.. ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவை நல்ல காட்சிகள் இல்லை என்பது எனது எண்ணம் கதையோடு சேர்ந்து வரும் காமெடி எனக்கு சம்மதம்..
ஆனால் தனி காமெடியில் எனக்கு உடன்பாடு இல்லை பொல்லாதவன் என் முதல் படம் என்பதால் தயாரிப்பாளர் சொன்னதை நான் கேட்க வேண்டியதாக இருந்தது படத்தில் சந்தானம், கருணாஸ் ஒரு காமெடியை உருவாக்குவார்கள். படப்பிடிப்பில் எல்லோரும் சிரிப்பார்கள் ஆனால் நான் சீரியஸாக பார்த்துக் கொண்டிருப்பேன்..
அதை பார்த்த சந்தானம் எல்லோரும் சிரிச்சிட்டாங்க அதனால டைரக்டர் இதை வைக்க மாட்டார் நாம வேற இடத்துல இந்த காமெடி வச்சிப்போம் என கருணாசிடம் சொல்லுவார் அப்படி உருவான படம் தான் பொல்லாதவன் என அந்த பேட்டியில் வெற்றிமாறன் அழகாக கூறியிருந்தார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரிவு வருகிறது.