சமீபகாலமாக தமிழ் நாட்டில் பல பிரச்சனைகள் எழுந்து வருகின்றன அதற்கு சரியான தீர்வு கொடுக்க முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர் இந்த நிலையில் தேவையில்லாமல் சில சர்ச்சையான பேச்சுக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மீரா மிதுன்.
இவர் தமிழ் திரை உலகில் ஒரு சில படங்களில் தலைகாட்டி இருந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இதனை அடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் கலந்து கொண்டு மற்ற போட்டியாளர்களை வம்புக்கு இழத்ததோடு மட்டுமல்லாமல் சர்ச்சையான சில விஷயங்களை பேசியதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் வெறுப்புக்குரிய நபராகக் காணப்பட்டார்.
இதனையடுத்து வெளிவந்து அவரது வேலையை செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஜய் ,சூர்யா ஆகியோரின் ரசிகர்கள் மீது சண்டை போட ஆரம்பித்தார் ஆரம்பத்தில் சிறு சண்டை ஆரம்பித்து பின் ரசிகர்களை தாண்டி அவர் நடிகர்களை வம்புக்கு இழுத்தது பெரும் ஆச்சர்யத்தை கிளப்பியது அப்படித்தான் என்று பார்த்தாலும் அவர்களது மனைவியையும் விட்டு வைக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி அதனை மிகப்பெரிய அளவில் பரபரப்பைகிளப்பினார். மீராமிதுன்னுக்கு ஈடு இணையாக அவரது ரசிகர்களும் இவரை வம்புக்கு இழுத்து திட்டினர்.
இதனை முடிவுக்கு கொண்டு வர சினிமா உலகில் இருக்கும் முன்னணி பிரபலங்கள் பலரும் மீரா மிதுனை கண்டித்தும் ,விமர்சித்து வருகின்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு அவர்களும் மீரா மிதுன் குறித்து தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். சினிமா உலகில் இருக்கும் பிரபலங்கள் மற்றொரு சினிமா பிரபலங்களை பேசுவது மிகவும் தவறு அது கஷ்டமாக இருக்கிறது எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டிருந்தார் மேலும் அவர் பல நிமிடங்கள் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.