திருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய முன்னணி நடிகர்களின் மெகா ஹிட் திரைப்படம்.!

ajith-rajini-vijay
ajith-rajini-vijay

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி பல திரைப்படங்கள் வெளியானாலும் ஏதோ ஒரு திரைப்படம் மட்டும்தான் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறது. அந்த வகையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் சமீப காலமாக கதை திருட்டு விவகாரம் தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகின்றன. அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தான் அதிகமாக கதை திருட்டில் சிக்குகின்றன. இப்படி திருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய டாப் நடிகர்களின் திரைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

கத்தி – ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் கத்தி இந்த திரைப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை காட்டியிருந்தார்கள். இந்த திரைப்படத்தின் ரிலீஸின்போது இதில் பேசப்படும் வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை சந்தித்தது. அதுமட்டுமில்லாமல் இயக்குனர் கோபி நாயினார் இது என்னுடைய கதை என கூறி சர்ச்சையை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் இயக்குனர் முருகதாஸ் என்னை ஏமாற்றி விட்டதாக அவர் மீது வழக்கும் தொடர்ந்தார். ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

ரஜினி நடிப்பில் வெளியாகிய எந்திரன் – ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி திரைப்படம் தான் எந்திரன் இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் திரைப்படமாகவும் அமைந்தது. ஆனால் இந்த திரைப்படத்தின் கதை எழுத்தாளர் ஆரூர் தமிழ் நண்பன் இது தன்னுடைய கதை எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதேபோல் இந்த கதை ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று 6ஆம் ஆண்டு பத்திரிகை ஒன்றில் வெளியான தாகவும் இந்த வழக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற பிறகு தீர்த்து வைக்கப் பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய 96 திரைப்படம் – நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியவர்கள் நடிப்பில் வெளியாகி திரைப்படம் 96 இந்த திரைப்படம் சிறந்த ரொமான்டிக் காதல் திரைப்படமாக வெளியானது படத்தை பிரேம்குமார் அவர்கள்தான் இயக்கியிருந்தார். இந்த நிலையில் பாரதிராஜாவின் முன்னாள் அசிஸ்டன்ட் சுரேஷ் என்பவர் 96 திரைப்படத்தின் கதை என்னுடையது என்று வேறொரு இயக்குனர் மூலம் பிரேம்குமார் இதை திருடி விட்டார் என்றும் இதுபோல் கதையை 92 என்ற பெயரில் தான் பதிவு செய்து இருந்ததாகவும் கூறியுள்ளார்.

சர்கார்-விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சர்கார் இந்த திரைப்படம் பல பிரச்சனைகளை ரிலீஸ் ஆவதற்கு முன்பே சந்தித்தது. டீசர் டிரைலர் ஆகியவற்றை பார்த்துவிட்டு இது தன்னுடைய கதை என வருண் ராஜேந்திரன் என்பவர் கூறினார். இந்த கதையை சங்கத்தில் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் அதனை ஆதாரத்துடன் நிரூபித்தது  தகவல் வெளியானது. பிறகு கே பாக்யராஜ் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு இதற்கு ஒரு தீர்வை கொடுத்தார்.

வலிமை- வினோத் இயக்கத்தில் அஜித்  நடிப்பில் வெளியாகிய திரைப்படம் வலிமை திரைப்படம் ஆக்ஷன் திரைப்படமாக உருவானது இந்த திரைப்படம் வெளியான முதல் நாளே ஒட்டுமொத்த தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ஓரங்கட்டியது மேலும் இரண்டாவது வாரத்திலேயே 200 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதை 2016ஆம் ஆண்டு வெளியாகிய மெட்ரோ திரைப்படத்தின் கதை போலவே இருப்பதாக சமூக வலைத்தளத்தில் போடப்பட்ட மீம்ஸ் செம வைரல் ஆனது.

மேலும் மெட்ரோ திரைப்படத்தின் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு கோர்ட் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.