தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக பார்க்கப்படுபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் கைகோர்த்து தனது 66 வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றி கரமாக நடித்து முடித்துள்ளார் இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த ஒரு படமாக உருவாயி வருகிறது.
அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, காதல் என அனைத்தும் இருக்கும் என கூறப்படுகிறது. வாரிசு படத்தில் விஜய் மிகப் பெரிய ஒரு பணக்காரராக நடித்துள்ளார் அவருடன் கைகோர்த்து இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
படம் அடுத்த வருடம் பொங்கலை குறி வைத்து ரிலீஸ் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க வாரிசு படக்குழு தொடர்ந்து அப்டேட்டுகளை கொடுத்த வண்ணமே இருக்கிறது இதுவரை ஃபர்ஸ்ட் லுக் , செகண்ட் போஸ்டர்கள் வெளிவந்தன.
அதனை தொடர்ந்து முதல் சிங்கிள் பாடல் வெளிவந்து இணையதளத்தில் வைரலானது. குறிப்பாக youtube இல் அதிக பார்வையாளர்களை பெற்ற ஒரு பாடலாக ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் இடம் பெற்றிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்த அப்டேட் கொடுத்துள்ளது.
ஆம் இன்று மாலை 4 மணிக்கு வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள தீ தளபதி என்னும் பாடலையும் ரிலீஸ் செய்துள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் பாடல் வேற லெவலில் இருக்கிறது இந்த பாடலும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் போல நல்ல ஹிட் அடிக்கும் என சொல்லப்படுகிறது இதோ அந்த பாடலை நீங்களே பாருங்கள்..