தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று (ஆக 23) திறக்கப்படுகின்றன. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் இந்த அறிவிப்பை வெளியிட பட்டதால் உடனடியாக திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் குறைவாகவே இருக்குமென தெரியவருகிறது.
இன்று திறக்கப்படும் தியேட்டர்களில் படங்களை வெளியிட எந்த ஒரு புதிய திரைப்படமும் வெளியாகாத காரணத்தால் ஏற்கனவே வெளியான தமிழ் மற்றும் வேறு மொழி திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிட உள்ளனர்.
அதாவது ஹிந்தி படமான பெல்பாட்டம், ஹிந்தி படமான காட்சில்லா vs கிங் காங், தமிழ் திரைப்படமான பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல திரைப்படங்களை சென்னையில் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு நடைபெறுகிறது.ஆனால் மற்ற மாநகரங்கள் மற்றும் நகரங்களுக்கான முன் பதிவுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவுகள் செய்ய இன்னும் திறக்கப்படவில்லை.
கொரோனா முதல் அலையின் காரணமாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 50% இருக்கைகளுடன் திறக்கப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களிலேயே 5 திரைப்படங்கள் வெளிவந்தன. டிசம்பர் மாதம் வரைக்கும் சின்ன சின்ன திரைப்படங்கள்தான் வெளியானது.
இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகுதான் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அதிகமாக வர ஆரம்பித்து விட்டனர்.
இதனடிப்படையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை இதேபோல் சின்ன சின்ன திரைப்படங்கள் வெளிவந்தால் மட்டுமே தியேட்டர்களில் ஓரளவு மக்கள் வருவார்கள். அண்ணாத்த, வலிமை போன்ற திரைப்படங்களை வெளியிட்டால் மட்டும்தான் அதிகமான ரசிகர்கள் மற்றும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள். என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.