தற்போதெல்லாம் சோஷியல் மீடியாவின் மூலம் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்கள். இதன் மூலம் இவர்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தவரும் நிலையம் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் யூடியூப்பில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சிறுவர்களில் ஒருவர் தான் ரித்து. இவருக்கு ஏழு வயதே ஆகும் நிலையில் rithu rocks என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்கள். ரித்து குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் கூட பொன் கேரக்டர், ஆண் கேரக்டர் என ஒரு வீடியோவில் நான்கு கேரக்டர் இருந்தாலும் அந்த நாலு கேரக்டரிலும் இவ்வாறு வித்தியாசமான கெட்டப்பில் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு நயன்தாரா திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதாவது நயன்தாராவிற்கு மகனாக o2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற 17ம் தேதி ஓடிடி வழியாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் ரித்துவை ஏராளமான யூடியூப் சேனல்கள் பேட்டி எடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா குறித்து பேசிய ரித்து நயன்தாரா மேம்வுடன் இணைந்து நடித்தது ரொம்பவும் ஹேப்பியாக இருந்தது என்று கூறியுள்ளார். மேலும் யூடியூப்ல நாங்கள் எடுக்கும் வீடியோவுக்கு சின்ன கேமராவும் 2 லைட் செட்டிங் வைத்துதான் எடுப்பாங்க ஆனால் இந்த பெரிய கேமரா மற்றும் நிறைய லைட் செட்டிங் பேச்சு எடுத்தாங்க என்று கூறிவுள்ளார்.
மேலும் ரித்து எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும் அதே அளவிற்கு அஜித் சாரையும் ரொம்ப பிடிக்கும் அவருடைய வலிமை திரைப்படத்தில் பைக் ஸ்டன்ட் சூப்பரா இருந்துச்சு அதனால அஜித் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் எனக்கு விஜய் சாரோட ஒரு படத்தில் அவரோட பையன் நடிக்கணும்னு ரொம்ப ஆசை என்ற அந்த சிறுவன் கூறிய தேடி நீ வளத்தில் வைரலாகி வருகிறது.