“பகாசூரன்” திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த இளம் ஹீரோ.? காரணத்தைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்

bakasuran
bakasuran

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் மோகன் ஜி இவர் பழைய வண்ணாரப்பேட்டை என்னும் படத்தை இயக்கி அறிமுகமானார் அதன் பிறகு திரௌபதி, ருத்ர தாண்டவம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர்  திடீரென  செல்வராகவனை வைத்து எடுத்த திரைப்படம் தான் பகாசூரன்.

படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் முழுக்க முழுக்க சமூகத்திற்கு ஒரு தேவையான படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்த வண்ணமே இருக்கிறது. எவனும் வசூல் ரீதியாக தோற்று உள்ளது. கதை நன்றாக இருந்தாலும் இந்த படத்தில் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் என்னவென்றால்..

கதைக்கு ஏற்றார் போல் இயக்குனர் செல்வராகவன் நடிக்கவில்லை என பலரும் சொல்லுகின்றனர்.  செல்வராகவனுக்கு பதில் மோகன் ஜி யின் ஆஸ்தான ஹீரோவான  ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தால் நிச்சயம் இந்த படமும் ஹிட் வரிசையில் இணைந்திருக்கும் என பலரும் சொல்லி வருகின்றனர் அதற்கு ஏற்றார் போல முதலில் மோகன் ஜி..

பகாசூரன் படத்தின் கதையை அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியிடம் தான் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த கதை பிடித்திருந்தாலும் இதில் நடிக்க மறுத்துள்ளார் அதற்கான காரணங்களும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் வரும் சிவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் சரியாக சொல்ல வேண்டும் என்றால்..

ஹீரோ கோவிலில் சேவகம் செய்யும் ஒருவராக தான் நடித்திருப்பார் அதை சுட்டிக்காட்டி ரிச்சர்ட் ரிஷி நடிக்க முடியாது என கூறி மறுத்து விட்டார் என தகவல்கள் உலா வருகின்றன.. ஆனால் ரசிகர்களுடைய கருத்து உண்மையில் இந்த கதாபாத்திரம் ரிச்சர்ட் ரிஷிக்கு சூப்பராக பொருந்தும், படமும் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் என கூறி வருகின்றனர்.