ரச்சிதாவிடம் கெடைச்ச கேப்பில் கேடா வெட்டும் ராபர்ட்.! கிஃப்ட்டை திருப்பி அனுப்பிய இளம் காதலி.! பிரேக்கப் பயத்தில் ராபர்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ரட்சிதாவின் மீது காதல் வலையை வீசி வரும் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களிடம் பெரிதும் கடுப்பினை சம்பாதித்து வருகிறார். அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 41வது நாள் கடந்துள்ள நிலையில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

முந்தைய சீசர்களை விட இந்த சீசன் போட்டியாளர்கள் பெரிதும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து ரட்சிதாவிடம் க்லோசாக பழகி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ரட்சிதாவும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடந்தையாக இருந்து வருகிறார் என்பதுதான் உண்மை. அதாவது ராபர்ட் மாஸ்டர் நடந்து கொள்வதை தவறு என்று தெரிந்தும் ரட்சிதாவும் அவரிடம் வழிந்து வழிந்து பேசி வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதா சில கருத்து வேறுபாட்டின் காரணமாக அவருடைய கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார் எனவே தினேஷ் பேட்டி ஒன்றில் ராபர்ட்டை கடுமையாக திட்டி இருந்தார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் பொழுது பிக்பாஸ் வீட்டிற்குள் ரட்சிதா ராபர்ட் இருவரும் ராஜா ராணியாக அருங்காட்சியகம் டாஸ்க் தேர்ந்தெடுக்கப்பட இவர்களுடைய நடவடிக்கைகள் பார்க்க சகிக்கவில்லை.

ரட்சிதாவுடன் நடனமாடுவது அவரை கையைப் பிடித்து இழுப்பது, கட்டிபிடிப்பது போன்ற லீலைகளை செய்து வந்த ராபர்ட் மாஸ்டர் உண்மையாக தன்னுடைய வயதில் மிகவும் குறைவாக இருக்கும் இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு பொருள் வந்துள்ளது.

ROBERT
ROBERT

அதில் ராபர்ட் மாஸ்டர் வெளியில் இருக்கும் பொழுது தன்னுடைய காதலிக்கு வாங்கி கொடுத்த மோதிரத்தை அனுப்பி தன்னுடைய காதல் முறிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் குழப்பத்தில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் குயின்சியிடம் புலம்பி கொண்டு இருக்கிறார் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரை கிண்டல் செய்து வருகிறார்கள்.