தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருக்கிறார் அந்த வகையில் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்த அவர் நடித்து வரும் திரைப்படம் வாரிசு..
இந்த படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த அடுத்த கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வாரிசு திரைப்படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்..
இந்த படம் ஒரு குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த ஒரு படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை தளபதி மற்றும் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அண்மைக்காலமாக விஜய் இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.
அந்த வகையில் அட்லி, லோகேஷ், நெல்சன் போன்றவர்களுடன் கைகோர்த்தார். குறிப்பாக அட்லீ உடன் இவர் கைகோர்த்து நடித்த மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் தான் இந்த மூன்று படங்களில் பணியாற்றும் போது விஜய்க்கும் அட்லீக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு அண்ணன் தம்பி போல பழகி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அட்லீ விஜயை தன்னுடைய சொந்த அண்ணன் போல் தான் பார்த்து வருகிறார் என்றும் விஜய்யும் தன்னுடைய உடன்பிறக்காத தம்பியை போல தான் அட்லீயை பார்த்து வருகிறார் என்றும் இருவரும் நல்ல நெருக்கமாக பழகி வருகின்றனர் என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.