தமிழ் சினிமாவில் முன்னோடி மற்றும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் பல ஆண்டுகளாக சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகராக நடித்து வருகிறார். இவருக்கு வயதானாலும் கூட இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் வயது முதிர்ச்சியின் காரணமாக இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே இவரால் நடிக்க முடியும் என்பதால் விரைவில் அதாவது இந்த ஆண்டிற்குள் இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். ஏனென்றால் தற்போது ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
இவர் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 40 ஆண்டு காலங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் மட்டுமே இருப்பதால் இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியுள்ளார்கள்.
இத்திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இந்த இரண்டு இயக்குனர்களில் ஒரு இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆறு வருடங்களாக ரஜினிகாந்துக்கு ஏற்றார்போல் ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும் ரஜினி ஓகே சொல்வதற்காக ஆறு வருடங்களாக காத்து வருவதாகவும் பிரபல இயக்குனர் ஒருவர் கூறி உள்ளார்.
மலையாளத்தில் வெளிவந்து தமிழ் ரசிகர்கள் உட்பட அனைவரையும் கவர்ந்த திரைப்படம் தான் பிரேமம்.இத்ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccதிரைப்படத்தை இயக்கியவர் தான் ஆல்போன்ஸ் புத்திரன் இவர் தான் ஆறு வருடங்களாக ரஜினிக்கு ஏற்றார் போல் ஒரு கதையை உருவாக்கி வைத்துள்ளதாகவும் ஆனால் ரஜினியை நேரில் சந்திக்க முடியாமல் இந்த கதையை அவரிடம் சொல்ல முடியவில்லை என்று புலம்பி உள்ளார்.