விஜய்க்கு தங்கையாக நடித்து தனது சினிமா கேரியருக்கு ஆப்பு வைத்துக் கொண்ட இளம் நடிகை – இப்ப என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.?

vijay
vijay

தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் நிறைய ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் இருப்பினும் அவரது கைரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாகவும் பெஸ்ட்டான படமாகவும் இன்று வரை பார்க்கப்படுவது கில்லி. இந்த படம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்..

அதே சமயம் இந்த படத்தில் ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் சரியாக பொருந்தி இருக்கும் குறிப்பாக இந்த படத்தில் அண்ணன் – தங்கை பாசம் வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருக்கும் ஒரு நிஜ அண்ணன் தங்கை எப்படி குறும்புத்தனமாக விளையாட்டத்தனமாக சண்டை போட்டுக் கொள்வார்களோ அதை தத்துரூபமாக காட்டி இருப்பார்கள்.

இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து திரிஷா, தாமு, பிரகாஷ் ராஜ், ஜெனிஃபர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் பிரபல்மடைந்த பலரும் இப்பொழுது அதிக பட வாய்ப்பு அள்ளி மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கின்றனர்.

ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபர் மட்டும் இன்னமும் வளர முடியாமல் இருந்து வருகிறார். இவருக்கு நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இருக்கிறது ஆனால் மக்கள் ஜெனிபர் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வராததால் தன்னால் ஜெயிக்க முடியவில்லை என சிறு தயக்கத்துடன் ஜெனிபர் பேசியிருந்தார். சினிமாவில் ஒரு பக்கம் முயற்சித்துக் கொண்டிருந்தாலும்..

மறுபக்கம் ஜெனிபர் சொந்தமாக ஆயுர்வேத முறைப்படி சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை ஒன்றை நடத்தி வருகிறார் 5 ஆண்டுகளாக தன் பெற்றோருடன் சேர்ந்து இதை செய்து வருகிறார் என கூறப்படுகிறது இவர் வெற்றி பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தளபதிக்கு தங்கையாக நடித்ததனால் தான் இந்த நிலை என பலரும் கூறி வருகின்றனர்.