நடிகர் தனுஷ் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த திருச்சிற்றம்பலம் கிளாஸ் ஆன படமாக இருந்தாலும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்ப பிடித்து போனதால் இந்த படம் நன்றாகவே ஓடியது வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ்..
கையில் நானே வருவேன், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. இதில் முதலாவதாக தனுஷின் நானே ஒருவன் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் இந்த படம் ஒரு சாகசம் நிறைந்த திரைப்படமாக இருக்குமென கூறப்படுகிறது.
இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். சத்தியஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது இந்த படத்தில் தனுஷ் உடன் கைகோர்த்து சந்திப் கிஷன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிப்பார் என கிசுகிசு பேசப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக பட குழு தற்பொழுது அதை உறுதிப்படுத்தும்..
வகையில் வெளிவந்த போஸ்டர் கூட தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இந்தப் படத்தில் கமிட்டாகுவதற்கு முன்பாக பிரியங்கா அருள் மோகன் ஜெயம் ரவி நடிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக இப்பொழுது அவர் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா அருள் மோகன் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார். இவர் இதுவரை நடித்த டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் வெற்றி படங்களாக மாறின அதனை தொடர்ந்து தற்பொழுது தனுஷ் உடன் முதல் முறையாக இவர் கைகோர்த்து உள்ளதால் இந்த படமும் ஒரு வெற்றி படமாக இருக்க அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.