படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் செஞ்ச வேலையை பார்த்து அதிர்ந்து போன இளம் நடிகை.! மொத்தமா 12 முடிச்சு..

dhanush
dhanush

நடிகர் தனுஷ் தொடர்ந்து சூப்பரான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் மாறன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் கையில் வாத்தி, திருச்சிற்றம்பலம்,  நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடிகர் தனுஷுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது தனுஷ் வாத்தி திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி ஆட்டுலூரி இயக்கி வருகிறார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில்  சித்தாரா பட நிறுவனம் தயாரித்து வருகிறது.

வாத்தி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் சில சுவாரஸ்யமான தகவல்கள் நடந்து அரங்கேறி உள்ளது அது குறித்தும் தனுஷ் குறித்தும் அவர் பேசியுள்ளார் அதை விலாவாரியாக பார்ப்போம்.

நடிகர் தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான் ஒரே சாட்டில் இயக்குனருக்கு என்ன தேவையோ அதனை கட்சிதாமாக கொடுக்கக்கூடியவர். ஆனால் நடிகை சம்யுக்தா மேனன் சொன்னது வேற.. நடிகர் தனுஷ் ஷூட்டிங் இடைவெளியில் அதிகம் புத்தகம் படிப்பார் அப்படி பாதி சூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமே சுமார் 12 புத்தகங்களை படித்துள்ளார் தனுஷ்.

இதனை சம்யுக்தா ஒரு செய்தியாக குறிப்பிட்டுள்ளார் அந்த அளவிற்கு புத்தகங்கள் மீது அதிக ஆர்வம் தனுஷுக்கு இருக்கிறது தனுஷ் புத்தகம் படிப்பதை பார்த்து தனக்கும் ஆசை வந்துவிட்டது தற்போது நானும் புத்தகம் படித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார் சம்யுக்தா மேனன்