கிசுகிசுக்கு பயந்து ஜெயிலர் பட வாய்ப்பை உதறி தள்ளிய இளம் நடிகை..? யார் தெரியுமா..

rajini
rajini

இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் முதல் முறையாக கைகோர்த்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்து வருகிறார் இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு 169 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் இந்த படத்தில் ரஜினி உடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது இதில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதன் புகைப்படங்கள் கூட லீக் ஆகின. ஜெயிலர் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தின் கதைக்கு ஏற்றபடி இன்னும் ஓரிரு முக்கிய நடிகர்களை படக்குழு தட்டித் தூக்கும் என தெரிய வருகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் ஜெயிலர் படத்தில் முதலில் பிரியங்கா அருள்மோகனை பட குழு நடிக்க வைக்க அணுகி இருக்கிறது ஆனால் பிரியங்கா அருள் மோகன் ஜெயிலர் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என மறுத்து விட்டார் என்ன காரணம் என்று பார்த்தால் பிரியங்காவை சுற்றி வரும் வதந்திகளை கூறுகிறார்கள்.

டாக்டர் படத்தின் பொழுது பிரியங்கா அருள்மோகன் பற்றியும் அந்த படத்தின் இயக்குனர் பற்றி பரவலாக பல வதந்திகள் வந்தன இப்பொழுது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நடித்தால் கிசுகிசு அதிகமாகிவிடும் அதற்கு நாமே வழி வகுத்தது போல ஆகிவிடும் என கருதிதான் ஜெயிலர் படத்திலிருந்து அவர் டீசன்டாக விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.