தலைவர் 170 படத்தில் இணைந்த இளம் நடிகை – யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..!

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இப்பொழுது இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து வருகிறார் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் தீலிப்குமாருடன்  உடன் முதல் முறையாக கைகோர்த்து தனது 169 வது திரைப்படம்  ஜெயிலர்..

திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் மற்ற இடங்களில் நடைபெற்று வருகிறது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகிறதாம் இந்த படத்தில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு போன்றவர்கள் நடித்து வருகின்றனர். நடிகர் ரஜினி இந்த படத்தை வெகு விரைவில் முடித்துவிட்டு அடுத்ததாக தனது 170 வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

இந்த படத்தை இளம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க லைகா நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் பட குழு பக்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை ஆனாலும் படம் குறித்து இணையதளத்தில் சில தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

கதைக்கு ஏற்றபடி நடிகர் நடிகைகளை தட்டி தூக்கி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து அரவிந்த்சாமி வடிவேலு போன்றவர்கள் நடிப்பதாக ஏற்கனவே சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது.

kalyani priyadharshan
kalyani priyadharshan