விவேக்குடன் நான் நடிக்காதது எனக்கு துரதஷ்டமே என கூறும் இளம் நடிகர்.! வைரல் நியூஸ் இதோ.

vivek 23222
vivek 23222

சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி ஒரு மனிதன் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எல்லோரையும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதால் மட்டுமே அவரை சிறந்த மனிதராக இந்த உலகம் பார்க்கும் அப்படித்தான் இருந்தவர் நடிகர் விவேக்.

இன்று அதிகாலை 4:45 மணி அளவில் இயற்கை எய்தியது பலருக்கும் நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது. இவர் திரையுலகில் இருந்து கொண்டே இருந்தாலும் சமூக அக்கறையும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்த இவர் இறந்து உள்ளது தற்போது பலரையும் அழ வைத்துள்ளது .

மேலும் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கலையும் தெரிவித்ததோடு சமூக வலைதள பக்கத்தில் அவரைப்பற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படியிருக்க பிரபல வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடைசி வரையில் விவேக் சார் உங்களுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு அழ வைத்துள்ளார்.

மேலும் திரை உலகில் மூத்த நடிகர்களுக்கு சிறப்பான மரியாதை கொடுக்கும் சிவா கார்த்திகேயன் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை படுவதும் உண்டு அப்படித்தான் காமெடி நடிகர் விவேக்கின் உடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என சிவகார்த்திகேயன் மிகப்பெரிய விருப்பம். ஆனால் அந்த ஆசை தற்போது நடக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறி கண்கலங்குகின்றன.