Bigg boss Oviya video viral: சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஓவியா இவர் 2007 ஆம் ஆண்டு கங்காரு என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து அவர் 2010 ஆம் ஆண்டு தமிழில் வெளியான களவாணி என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார். இதனை அடுத்து அவர் தமிழில் மன்மதன் அம்பு, மெரினா, கலகலப்பு, மூடர்கூடம், சில்லுனு ஒரு சந்திப்பு, புளிவால், யாமிருக்க பயமே ஏன், மதயானைக் கூட்டம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார் .
இதனைத் தொடர்ந்து இவர் தமிழில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸில் கலந்து கொண்டு பெரும் பிரபலம் அடைந்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கின. இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது எந்த பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில் இருக்கிறார்.
அம்மணி கடைசியாக நடித்த 90ml படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படம் பெண் சமூகத்திற்கு விரோதமாக இருந்தது எனவும் அதுமட்டுமில்லாமல் ஓவியவின் பெயர் டேமேஜ்ஜும் ஆனது. தற்போது அவர் ஆரவ் உடன் ராஜபீமா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய பெயரில் மோசமான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது வேறு யாரோ, ஆனால் ஓவியா தான் இருக்கிறார் என கூறி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிவிட்டனர்.