சினிமா உலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்த நடிகர்களுக்கு எப்பொழுதும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி பின் போக போக சென்டிமென்ட், சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து தன்னை வளர்த்துக்கொண்டார்.
ரசிகர்களும் அந்தப் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்ததால் நாளுக்கு நாள் ஜெயம் ரவியின் சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பூமி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் எந்த ஒரு திரைப்படமும் திரையரங்கில் வெளியாகாமல் இருந்தது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுக்கிறது.
இருப்பினும் அடுத்தடுத்து கொடுக்கின்ற படங்கள் வெற்றிப் படங்களாக இருக்க வேண்டும். என்பதால் தொடர்ந்து நடித்து வருகிறார் அந்த படங்களும் வெளிவர ரெடியாக இருக்கின்றன அந்த வகையில் பொன்னியின் செல்வன், அகிலன் போன்ற படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. இந்த படம் முழுக்க முழுக்க மறக்க முடியாத படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடியது. வசூலிலும் பட்டையை கிளப்பியது கோமாளி படம்.
இந்த படம் ஜெயம் ரவி சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது இந்த திரைப்படம் அப்பொழுது நல்ல வரவேற்ப்பை பெற்று சுமார் வசூல் 63 கோடி அள்ளியதாக கூறப்படுகிறது. கோமாளி படத்தை தொடர்ந்து வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் இந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.