நடிகர் சூர்யா மற்ற நடிகர்களை காட்டிலும் வித்தியாசமாக இருக்க காரணம் எப்பொழுதும் நல்ல கருத்துக்களை எடுத்து வைக்கக் கூடிய படங்களை கொடுத்து வந்துள்ளார். அப்படித்தான் அண்மையில் கூட வெளியான சூரரைப்போற்று ஜெய் பீம் ஆகிய திரைப்படங்கள் அமைந்தன.
அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் சமுதாயத்தில் இருக்கும் நல்லதொரு கருத்தை எடுத்துரைக்கும் படமாக அமைந்துள்ளது. அந்த காரணத்தினால் இந்த திரைப்படத்தை பார்க்க மக்கள் கூட்டம் திரையரங்கை நாடிய வண்ணமே இருக்கின்றன.
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து சத்தியராஜ், திவ்யா துரைசாமி, பிரியங்கா அருள் மோகன், சூரி மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர். இப்படம் ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் பொருந்தி இருக்கிறது இதனால் இந்த திரைப்படம் நிச்சயம் நல்ல வரவேற்பு காண்பதோடு வசூலிலும் அடித்து நொறுக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இரண்டு நாட்களில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி பார்க்கையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலக அளவில் இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட 50 கோடியை தொட உள்ளதாக கூறப்படுகிறது.
அதை விலாவாரியாக பார்ப்போம் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் நாளில் 30.54 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் 18.10 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டு மொத்தமாக 48.6 4 கோடி 2 நாட்களில் மட்டும் உலக அளவில் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.