kamal marrige rajini work : இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக பார்க்கப்படுவது ரஜினி மற்றும் கமல். இருவருமே திறமையான நடிகர்கள் தான் ஆனால் நமக்குள் போட்டி வேண்டாம் என்ற காரணத்தினால் இருவரும் தனித்தனியான ட்ராக்கில் ஓடினர். ஒரு சில படங்களில் ஒன்றாக சேர்ந்து கூட நடித்து இருக்கின்றனர்.
அதேபோல எதிர்பாராத விதமாக ஒரு சில தடவை படங்களின் மூலம் மோதியும் இருக்கின்றனர். இருந்தாலும் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் இன்றும் நல்ல நட்புடன் ரஜினி, கமல் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுது வயது முதிர்வின் காரணமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர்.
கமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது. அதே போல ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இந்த நிலையில் ரஜினி பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கமல் 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதுதான் முதல் திருமணம் அந்த திருமணத்தில் ரஜினி கலந்து கொண்டார் மேலும் அந்த திருமணத்தில் கமலுக்கு மாப்பிள்ளை தோழனாகவும் ரஜினி இருந்துள்ளார். கல்யாணத்தை முழுவதையும் முடித்துக் கொடுத்துவிட்டு தான் ரஜினி சென்றாராம்..
இதோ திருமணத்தை கோலத்தில் இருக்கும் கமலுக்கு ரஜினி கைகொடுக்கும் அந்த அரிய புகைப்படம் வைரலாகி வருகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுடைய நட்பு திகைக்க வைக்கிறது வேற லெவல் எனக்கூறி கமெண்ட்களை கொடுத்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.