ஜெயிலர் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு இயக்குனர் நெல்சன் செய்த வேலை.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்.

jailer-

இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக நல்ல படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு வருகின்றனர் அந்த வகையில் நெல்சன் திலிப் குமாரின் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன.  இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் என்னும் படத்தை எடுத்து வருகிறார்.

இந்த படம் சூப்பர் ஸ்டாருக்கு 169 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக எடுக்கப்பட்டு வருவதால் இந்த படத்தில் ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது. துணிவு திரைப்படத்தில் ரஜினி ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது இவருடன் கைகோர்த்து கன்னட டாப் ஹீரோ சிவராஜ் குமார்..

ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை மற்றும் முக்கிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது படம் அடுத்த வருடம் ஆரம்பத்திலேயே திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு கத்தாரில் நடக்கும் fifa கால்பந்து உலக கோப்பையை பார்க்க சென்று விட்டாரா.? என கேள்வி எழுப்ப வைத்துள்ளது ஏனென்றால் நெல்சன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “மெஸ்ஸி” என எழுதி ஹாட்டின் சிம்பலை போட்டு அவர் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படம் தற்போது லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வருகிறது. மறுபக்கம் ரசிகர்கள் நீங்கள் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு இந்த போட்டியை பார்க்க போனது உண்மையா என கேள்வியும், எழும்பி வருகின்றனர்.

messi
messi