இளம் இயக்குனர்கள் காலத்திற்கு ஏற்றவாறு புதிய படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்துகின்றனர் அந்த வகையில் இளம் இயக்குனர் நெல்சன் இதுவரை கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை சிறப்பான முறையில் எடுத்து வெற்றி கொண்டார்.
அதனால் இவரது இயக்குனர் திறமையை பார்த்து பல்வேறு நடிகரும் கதை கேட்க ஆரம்பித்தனர் அப்படி ஒரு கதையைத்தான் தளபதி விஜய்க்கு சொல்லி உள்ளார் அந்த படமே தளபதியின் 65வது திரைப்படமான பீஸ்ட் உருமாறியது இந்த படம் ஏப்ரல் 13ம் தேதி உலக அளவில் வெளியானது.
படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காமெடி கலந்த திகில் படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது ஆனால் பல்வேறு இடத்தில் லாஜிக் மீறல் மற்றும் சரியான காட்சிகள் அமையாததால் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வசூலும் சற்று குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் நெல்சன் சினிமா ஆரம்பத்தில் பேட்டி ஒன்றில் சினிமாவிற்கு எதற்காக வந்தீர்கள் என கேட்டதற்கு சம்பாதிக்கத்தான் என கூறி உள்ளார். என்னதான் நம்ம நல்ல படங்களை கொடுத்தாலும் கொஞ்ச நாள்தான் மட்டுமே பேசுவார்கள் அதன்பின் வந்த தடயமே தெரியாமல் மறைந்து போய்விடும் இப்படி நெல்சன் பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகர் கமலஹாசன் பேசிய வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் வருகின்றனர். அந்த வகையில் அவர் சொன்னது சினிமாவில் கால்பதிக்க கனவு இருந்தால் மட்டுமே பாருங்கள் வியாபாரத்திற்கு வேறு வழி இருக்கிறது. இந்த வியாபாரம் கலை சார்ந்த வியாபாரம் என்று கமல் பேசியுள்ளார்.
போதை பொருளும், நாட்டுப்புற மருந்தையும் விற்பதற்கு என்ன வித்தியாசம் இருக்கிறதோ அப்படி நல்ல கதைக்கும் பணம் சம்பாதிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது என கூறி உள்ளார் பணத்திற்காக மட்டுமே எடுக்கப்படும் திரைப்படங்கள் எப்படி என்றால் போதைபொருள் எப்படி சீக்கிரமாக வெற்றி பெறுகிறதோ, அப்படித்தான் இதுவும் இருக்கும் என கூறினார் அந்த வீடியோ தற்போது நெல்சன் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்து வந்துள்ளது.