simbu :தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலம் நடிகர் சிம்பு . இவர் தனது டி ஆர் போலவே பஞ்ச் டயலாக் பெரிய அளவில் பிரபலமடைந்தார். மேலும் அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வளர்ந்து வந்த சிம்பு தனது படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் அதிகம் நடித்ததால்..
அவர் அந்த நடிகைகளை காதலிப்பதாக கிசு கிசுக்கள் எழுந்தன. காதல் அழிவதில்லை படத்தில் சார்மி, அலை படத்தில் திரிஷா ஆகியவர்களுடன் கிசு கிசுக்கப்பட்டார் சிம்பு அதனைத் தொடர்ந்து வல்லவன் படத்தில் நயன்தாராவும், சிம்புவும் படுகை அறை காட்சி புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலாகின..
இது பெரிய அளவில் கிசுகிசுக்கப்பட்டது இதற்கு இருவருமே எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை அதன் பிறகு இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அந்த காதல் ரொம்ப நாட்கள் நீடிக்க வில்லை உடனே பிரிந்து விட்டனர். அதன் பிறகு வாலு திரைப்படம் நடித்து வந்தார். அப்பொழுது ஹன்சிகாவும், சிம்புவும் காதலில் விழுந்தனர் இந்த காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது.
தற்பொழுதும் சிம்பு தனது படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு தான் வருகிறார். நிஜ வாழ்க்கையில் பல ஏற்ற, இறங்ககளை சந்தித்த சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அளித்த பேட்டியில் சில விஷயங்களை உடைத்து பேசி உள்ளார்.. நம்ம வாழ்க்கையில எதுவுமே நிரந்தரம் இல்லையே.. இந்த தாடி லைட்ட எனக்கு நல்லா இருக்குன்னா.. நாளைக்கு சேவ் பண்ண போயிடும்.. இதுக்கு முன்னாடி சி ஆர் டி வச்சிருந்தேன் இன்னைக்கு நான் புது வண்டி வாங்கிட்டேன் சோ என்ன சொல்றது.
யாருமே நம்ம கூட இருக்க போறது இல்லை நாம கடைசியா போகும் பொழுது நம்ம மட்டும்தான் நம்ம கூட இருக்கப் போகிறோம் அந்த பேட்டியில் இவ்வாறு சிம்பு கூறி இருந்தார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சிம்பு கடைசி வரையும் சிங்கிளாக இருக்கப் போகிறாரா என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.