எனது அம்மா சொன்ன வார்த்தைகள் உண்மையாகிவிட்டது.! மேடையில் அழுதுகொண்டே சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.

paakiyalaxmi
paakiyalaxmi

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் தொடர்ந்து டாப் லிஸ்டில் இருக்கும் தொடரில் ஒன்று பாக்கியலட்சுமி. இவை விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடராகும். இதில் இல்லதரசி பெண்ணாக  பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் சுஜித்ரா என்ற நடிகை நடித்து வருகிறார்.

இவரது நடிப்பிற்கு பல ரசிகர்கள் உள்ளனர் அந்தளவிற்கு கொடுத்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தி வருகிறார். மேலும் தற்போது பாக்கியலட்சுமி  தொடரில்  ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு பாக்யாவின் சமையல் அனுப்பப்பட்டது அதை சாப்பிட்ட குழந்தைகள் அனைவரும் மயங்கி மருத்துவமனைக்கு சென்று உள்ளதால் பாக்கியாவை போலீஸ் கைது செய்துள்ளனர்.

ஒரு வழியாக பாக்யாவின் மகன் எழில் தனது அம்மா செய்த சமையலில் குறை இல்லை வேறு ஒருவர் கொடுத்த லட்டை சாப்பிட்டதால் தான்  மாணவர்கள் மயங்கியது என நிரூபித்து தனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் வீட்டிற்கு வந்த பாக்கியாவை அவரது கணவர் கோபி உனக்கு இந்த சமையல் வேலையெல்லாம் வேண்டாம் எல்லாத்தையும் இழுத்து மூடிவிட்டு வீட்லயே இரு என கோபமாக பேசினார்.

இப்படி பாக்கியலட்சுமி கதை களம் நகர்ந்து வரும் நிலையில் விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் இந்த சேனலில் பணியாற்றி வரும் நடிகர் நடிகைகளில் சிறந்தவர்கள் யார் என்பதை தேர்வு செய்து விருது வழங்கி வருவார்கள் அப்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிறந்த நாயகிக்காக பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் சுஜித்ரா விருது வாங்கியுள்ளார்.

அப்போது மேடையில் பேசிய சுஜித்ரா அனைவருக்கும் நன்றி தெரிவித்து விட்டு நாம் உழைத்துக் கொண்டே இருந்தால் ஒருநாள் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக கிடைக்கும் என எனது அம்மா கூறினார். அதுபோல் நான் விருதும் வாங்கி விட்டேன், ஆனால் எனது அம்மா இல்லை என கண்ணீருடன் சுசித்ரா பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி உள்ளது.