அவளால என் பொண்ணோட படிப்பே போச்சு..! ரவுடி பேபி சூர்யாவை கைது செய்ய சொல்லி கமிஷனர் ஆபீசில் ஆர்ப்பாட்டம் செய்த பெண்..!

tik-tok-surya-1

சமீபத்தில் டிக் டாக் செயலி மூலமாக பல்வேறு தரப்பு மக்களும் தங்களுடைய திறமையை சமூக வலைதள பக்கத்தில் வெளிகாட்டி வந்தார்கள் அந்த வகையில் அரைகுறையான ஆடை அணிந்து கொண்டு மிகவும் மோசமாக நடனமாடி ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா.

இவர் சமூக வலைதள பக்கத்தில் கொச்சையான வார்த்தைகளை உபயோகப் படுத்துவது மட்டுமில்லாமல் பலரிடமும் சண்டை போடுவது சமூக வலைதளப் பக்கத்தில் வேண்டாத வேலை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் பேபி சூர்யா நான் சிங்கப்பூருக்கு சர்வீஸுக்கு போறேன் வரியா என இலக்கியவை கேட்டுள்ளார்.

இவ்வாறு இவர்கள் பேசிய ஆடியோ ஆனது பிரபல யூடியூப் சேனலில் வைரலாக பரவியது அந்த வகையில் அந்த சேனல் சம்பந்தப்பட்டவரை ரவுடி பேபி சூர்யா மிரட்டியது மட்டும் இல்லாமல் அந்த ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின

மேலும் சென்னை மேடவாக்கத்தில் சேர்ந்த ஜெனிபர் தனம் என்கின்ற பெண் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்ட டிக் டாக் பிரபல ரவுடி பேபி சூர்யா மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.இவ்வாறு பல புகார்கள் அளித்தும் ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறார்கள்.

ஜெனிபர் தனம் தனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் அதில் ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் பத்தாம் வகுப்பும் படித்து வருகிறார்கள் இவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ் நடைபெற்ற நிலையில் அடிக்கடி ரவுடி பேபி வீடியோ வந்ததன் காரணமாக அவரிடம் தொடர்பு கொண்டார் இதன் காரணமாக ஜெனிபர் தனத்தை கொச்சையாக பேசியது மட்டும் இல்லாமல் தான் தவறான தொழில் செய்வதாக தன்னுடைய நம்பரை பதிவிட்டு பல்வேறு பிரச்சினைக்கு உள்ளாகி விட்டார்.

இதனால் பலரும் எனக்கு தொலைபேசி மூலம் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள். இதனால் ஜெனிபர் தனம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் மேலும் டிக் டாக் சூர்யா கஷ்டத்தில் இருக்கும் பல பெண்களை கூறி வைத்து அவர்களை சிங்கப்பூர் அமெரிக்கா என  தவறான தொழிலுக்கு அனுப்பி வைக்கிறார்.

tik-tok-surya-1
tik-tok-surya-1

அந்த வகையில் தன்னிடம் நீ கமிஷனர் என்ன முதலமைச்சரிடம் கூட சென்றாலும் என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது எனக்கு பக்கபலமாக பல அரசியல்வாதிகள் உள்ளார்கள் என ரவுடி பேபி சூர்யா கூறியுள்ளார் இதனை தொடர்ந்து ஜெனிபர் தனம் ரவுடி பேபி சூர்யா செய்த பல்வேறு செயல்களையும் வீடியோ மூலமாக ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார்.  இதனால் ரவுடி பேபி சூர்யா விரைவில் கைது செய்யப்படுவாரா இல்லை சுதந்திர பறவையாக இன்னும் பல சர்ச்சையில் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.