தமிழ் திரை உலகில் ஒரு சில காலமாகவே நகரப்புற வாழ்க்கை மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகிய இரு தலைப்புகளை வைத்து பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை வைத்து ஆடுகளம்,அசுரன் போன்ற பல படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.
மேலும் இவர் அசுரன் திரைப்படத்திற்காக விருது பெற்றார் என்பது இவருக்கு மிகவும் பெருமையாக தான் இருக்கும் இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வரும் சூரியை வைத்து கதாநாயகனாக ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
ஆம் எழுத்தாளர் ஜெயமோகன் சிறுகதையிலிருந்து சினிமா கதையை சேர்த்து உருவாக்கி விறுவிறுப்பாக வெற்றிமாறன் படமாக்கி வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு இளையராஜா முதன் முறையாக இசை அமைக்கிறார் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது.
இதனையடுத்து இந்த திரைப்படத்தைப் பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அந்த தகவலில் முதலில் சூரி நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தந்தை வேடத்தில் வெற்றிமாறன் பாரதிராஜாவை நடிக்க வைக்க இருந்தாராம் ஆனால் அவர் சுற்றுச்சூழல் காரணம் குறித்து அந்த படத்தை விட்டு விலகி விட்டாராம் இதனை அடுத்து இந்த திரைப்படத்தில் சூரிக்கு தந்தையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த படம் சீக்கிரம் எடுத்தால் நல்லா இருக்கும் என கூறி வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் தலைப்பு ரஜினி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் தலைப்பை வைத்துள்ளார்களாம்.
ரஜினி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது இதை வைத்து பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவலில் தான் இருக்க போகிறது என கூறி வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சமீப காலமாகவே ரஜினியின் பழைய பட தலைப்புகளை தான் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.