தமிழ் சினிமா உலகில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் தோல்வியை சந்திக்காத இயக்குனர்களாக வலம் வருகின்றனர் அவர்களில் முதன்மையானவராக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். காரணம் இவர் படங்கள் அனைத்தும் இதுவரை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல் தேசிய விருதையும் அள்ளி உள்ளதால் முதலிடத்தில் வசிக்கிறார்.
வெற்றிமாறன் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றிய பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார் முதலில் நடிகர் தனுஷை வைத்து ஆக்ஷன் மற்றும் காதல் சம்பந்தப்பட்ட படத்தை எடுத்தார் படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது அதனை தொடர்ந்து வெற்றிமாறன் தனுஷ் உடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்து தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.
அந்த வகையில் வடசென்னை ஆடுகளம் அசுரன் போன்ற படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து தனுஷ் உடனே பயணித்து ஓடிக் கொண்டிருந்ததால் வெற்றிமாறன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூரி, விஜய் சேதுபதியை வைத்து தற்போது விடுதலை என்னும் படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவுடன் இணைவார் என தெரியவருகிறது இது எல்லாம் முடித்த பிறகுதான் தனுஷுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் தொடர்ந்து தனுஷ் உடனே பயணிக்கிறார்கள்எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறியது இதுவரை நான் யாரிடமும் சொல்லாத ஒன்றை சொல்கிறேன் என கூறி ஆரம்பித்தார்.
தனுஷை வைத்து மட்டும் படம் எடுப்பதற்கு முக்கிய காரணம். அவர் மட்டும் தான் கதை கேட்காமல் நடிப்பார். 4 டயலாக்கை 40 நாள் புக் பண்ணினாலும் அசர மாட்டார், கோபப்பட மாட்டார். வேறு எந்த நடிகராக இருந்தாலும் இப்படி பண்ணுவாரா என்பது கேள்விக்குறி தான் என கூறினார்.