ஏற்கனவே மூழ்கி முத்தெடுத்த கதாபாத்திரத்தில் கௌதம் மேனனை கமிட் செய்த வெற்றிமாறன்..! கண்டிப்பா படம் வேற லெவல் தான்..!

vetrimaran-01

தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என்று போற்றப்படுபவர் தான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படங்கள் நாளடைவில் நல்ல வரவேற்ப்பை பெற்று தருவது மட்டுமில்லாமல் மாபெரும் ஹிட்டு கொடுத்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்திற்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது மட்டுமல்லாமல் இவருடைய கதை எப்பொழுதும் வித்தியாசமாக இருந்து வரும் என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் நாவலைத் தழுவி தான் எடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வைத்த விடுதலை என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பல்வேறு மாற்றங்களையும் வெற்றிமாறன் கொடுத்துள்ளாராம். அந்தவகையில் போலீஸ் அதிகாரிகள் தன்னுடைய சொந்த வாழ்க்கையை எப்படி பயணிக்கிறார்கள் அவர்களுக்கும் கீழ் வேலை செய்யும் பணியாட்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க கௌதம் வாசுதேவ் மேனனை இயக்குனர் வெற்றிமாறன் அனுகி உள்ளாராம். இவ்வாறு அவருக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை கேட்டுவிட்டு நமது கௌதம் மேனன் இந்த காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

gowtham-1
gowtham-1

சமீபத்தில் கௌதம் மேனன் நடிக்கும் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் பெருமளவு நடித்து வருகிறார் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள். பொதுவாக வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அதேபோல கௌதம் மேனன் அப்பொழுதிலிருந்து நல்ல இயக்குனர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் இந்நிலையில் இருவரும் ஒன்றிணைவதால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.