நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் இப்பொழுது தனது 61வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தின் மூன்று கட்டப்படிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு காத்திருக்கிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, மலையாள நடிகை மஞ்சு வாரியர், அஜய், யோகி பாபு, மகாநதி சங்கர் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் ஒரு பக்கமே இருக்க மறுபக்கம் அஜித் பற்றிய செய்தி ஒன்று தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது அஜித்திற்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அப்படியே ஒதுக்கி விடுவார். அதுதான் அவரது ஸ்டைலும் கூட.. அந்த வகையில் நடிகர் அஜித்குமார் 2002 ஆம் ஆண்டு ராஜா என்னும் படத்தில் நடித்தார் இந்த படத்தில் காமெடியனாக வடிவேலு நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அஜித்திற்கும், வடிவேலுக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட இருவரும் பிரிந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட பண்ணவே இல்லை.. அப்படி என்னதான் பிரச்சனை நடந்திருக்கும் என பலரும் மண்டையை பிச்சி கொண்டிருந்த..
நிலையில் தற்போது வடிவலுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சக நடிகர் டெலிபோன் ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித்திற்கும், வடிவேலுக்கும் இடையே நடந்த பிரச்சனை குறித்து பேசி உள்ளார். ஒரு நாள் அஜித்தை வடிவேலு “அஜித்தே” என பெயர் சொல்லி அழைத்து விட்டார் அது பிடிக்காமல் தான் அஜித் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கியதாக நடிகர் டெலிபோன் ராஜ் தெரிவித்துள்ளார்.
