சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் செய்து பார்க்கக்கூடிய ஒரே நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இதன் முதல் சீசன் சற்று வித்தியாசமாக தொடங்கின. சமைக்கத் தெரிந்த போட்டியாளர்களுடன் சுத்தமாக சமைக்க தெரியாதவர்களை..
ஜோடி போட்டு இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி மக்களை கவர்ந்துள்ளது. ஒவ்வொரு சீசனும் மக்களுக்கு பேவரட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது வரை மூன்று சீசன்கள் நிறைவடைந்து நேற்று நான்காவது சீசன் தொடங்கப்பட்டது.
இதிலும் வழக்கம் போல ஜட்ஜ் ஆக வெங்கட் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் குக்காக 9 பேர் நேற்று கலந்து கொண்டனர் அவர்களுடன் சேர்ந்து லூட்டி அடிக்க புகழ் மற்றும் பல புதுமுக கோமாளிகளும் பங்கு பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த சீசனில் மொத்தம் பத்து போட்டியாளர்களாம்..
அதில் ஒன்பது போட்டியாளர்கள் நேற்று கலந்து கொண்டனர். மேலும் இதில் குக்காக கடந்த சீசன்களில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி கலந்து கொண்டது பலருக்கும் ஷாக் ஆகி உள்ளது. இன்னும் ஒருவர் அடுத்த வாரம் பங்கு பெற உள்ளார் என தொகுப்பாளர் ரக்சன் நேற்றிய எபிசோடில் கூறியிருந்தார்.
அதனால் அவர் யாராக இருப்பார் என பலரும் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது அவர் வேறு யாரும் அல்ல பல படங்களில் வில்லனாக நடித்து வரும் மைக் கோபி தான் குக் வித் கோமாளி நான்காவது சீசனில் பத்தாவது போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார்.