தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு இவர் இதுவரை பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்துள்ளார் அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளது மாநாடு திரைப்படமும் இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
சிம்பு உடன் இந்த படத்தில் கைகோர்த்தது எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், மனோஜ், கருணாகரன், பிரேம்ஜி போன்ற பலரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இந்த படத்தில் ஹைலட் என்றால் எஸ் ஜே சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் வரும் காட்சிகள் பிரமாதம் அதற்கு வலுசேர்க்கும் வகையில் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் மிக அற்புதமாக இருந்தது.
மாநாடு திரைப்படம் வெற்றி பெற முழுக் காரணம் பல தடைகளைத் தாண்டி ஒருவழியாக திரைக்கு கொண்டுவந்து சுரேஷ் காமாட்சி அசத்தியது தான். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளதால் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் எஸ் ஜே சூர்யா நடித்த தனுஷ்கோடி கதாபாத்திரத்திற்கு ஏன் அந்த பெயர் வைக்கப்பட்டது என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார் வெங்கட்பிரபு அவர் கூறியது : எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரம் மிக வாய்ந்த ஒன்று அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒரு வலிமையான பெயரை தேடிக் கொண்டிருந்தோம்.
அப்போது எங்கள் நினைவிற்கு தோன்றியது ரஜினி – கமல், அஜீத் – விஜய், சிம்பு – தனுஷ் என எங்களது தோன்றியதே இதனை அடுத்து தனுஷ் பெயரை வைத்தால் செம்ம மாஸாக இருக்கும் எனத் தோன்றியது அதை சம்பந்தப்பட்ட தான் தனுஷ்கோடி என பெயர் வைத்தோம் என அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.