KGF 2 படத்தின் வில்லன் இந்த காட்டு மிராண்டி தான்.! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

KGF-CHAPTER-2
KGF-CHAPTER-2

சினிமா உலகில் ஒரு படத்தை  வெற்றி பெற வைக்க இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகள் என பலரும் தனது திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெறமுடியும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் ஒரு சில படங்கள் அந்த மொழியையும் தாண்டி உலக அளவில் பிரபலம் அடைவது வழக்கம்.

அந்த வகையில் தற்பொழுது பிரபலமடைந்த படம்தான் கேஜிஎப் இத்திரைப்படம் கன்னடத்தில் எடுக்கப்பட்டு கதை சிறப்பாக அமைந்ததால் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பட்டிதொட்டி எங்கும்  பிரபலம் அடைந்தது. இப்படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். இப்படத்திற்கு முன்னதாக காதல்  படங்களில் நடித்து வந்த யாஷ்.

கேஜிஎப்  படத்திற்கு பிறகு அவர் ஒரு மாஸ் ஹீரோவாக காணப்பட்டார். மீண்டும் அவரை மாஸ் ஹீரோவாக பார்க்க  மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர் அதனை படக்குழுவினர் உறுதி செய்து உள்ளனர் முதல் பாகம் மாபெரும் ஹிட்டடித்த அதன்மூலம் இரண்டாம் பாகத்தினை தற்பொழுது எடுத்து வருகின்றனர்.

இப்படத்தை உலகம் முழுவதுமே மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என எங்கு கொண்டு இருக்கின்றனர்.முதல் பாகத்தில் யாஷ் அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மேலும் அவர்களுக்கு ஏற்றார்போல வில்லன்களும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதுபோல இப்படத்திலும் அவருக்கு இணையான வில்லன் இருக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர் அதனை படக்குழுவினர் சரியாக புரிந்து கொண்டு முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சய் தத்தை நடிக்க வைத்துள்ளனர். இப்படத்தில் அவர் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் கேஜிஎப்  2 பாகத்தில் சஞ்சய் தத்தின் வில்லன் கேரக்டரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிரண்டு போய் உளளனர். இதோ அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்.