தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி இவர் வருடத்திற்கு அரைடஜன் படங்களில் நடித்து வெளியிட்டு வருகிறார். அதேபோல் விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலை கிடைக்க சத்தமில்லாமல் உதவி செய்துள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அன்போடு அழைப்பார்கள் அந்தப் பெயருக்கு உரியவர் என்று கூறலாம் அந்தளவு உதவி செய்வதில் தயக்கமில்லாமல் செய்து வருகிறார். இந்தநிலையில் புதுச்சேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வீரராகவன் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். விஜய் சேதுபதி நான் செய்யும் உன்னதமான செயலை விளம்பர படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் என்னால் அப்படி இருக்க முடியவில்லை அவரின் வேண்டுகோளையும் மீறி நன்றியின் காரணமாக இதை வெளியிடுகிறேன் வீரராகவன் கடந்த 2016ஆம் ஆண்டு வாட்ஸ் அப்பை தகவல் தொடர்பு சாதனமாக பயன் படுத்தி ஏழை எளியமக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இதில் ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்படி செய்து வந்தார்.
இதைக் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி நீங்கள் சன் தொலைக்காட்சியில் தான் தொகுத்து வழங்கிய நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைத்தார் இந்த நிகழ்வு மார்ச் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அதற்குள் சமூக ஆர்வலர் 3345 ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளார் வீரராகவன் அர்ப்பணிப்பை பார்த்த விஜய் சேதுபதி ஈர்க்கப்பட்ட நிலையில் மேலும் இன்னும் சில உயரத்தை நீங்கள் அடைவதற்கு உதவுவதாக உறுதியளித்தார்.
அதுமட்டுமில்லாமல் வீரராகவன் அவர்களுக்கு அலுவலகம் அமைக்கவும் பணியாளர்களை நியமிக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்து வந்தார் இதற்கு என்ஜிஓ வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை மையம் என பெயரிடப்பட்டு தொடர்ந்து விஜய் சேதுபதி பணம் உதவி செய்து வந்துள்ளார் அதனால் அந்த சமூக சேவகர் கடினமாக உழைத்து வந்தார்.
மேலும் அந்த சமூக ஆர்வலர் கூறுகையில் விஜய் சேதுபதியின் உதவியால் தான் இன்று இந்தியா முழுவதும் உள்ள நிறுவனங்கள் இந்த அமைப்பு தொடர்புகொண்டு வேலைகளை வழங்கியுள்ளது மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த அமைப்பின் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வேலை பெற்றுள்ளார்கள் எனவும் கூறியுள்ளார்.
வேலை தேடுபவர்கள் https://www.vvvsi.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் இப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து வரும் விஜய்சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள். காசு கொடுத்தால் வேலை தருகிறேன் என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி இப்படி செய்துள்ளது பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.