தமிழ் சினிமா உலகில் N0. 1 ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா உலகை பொறுத்தவரை ரஜினி பல்வேறு படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்தாலும் அதே அளவிற்கு வில்லன் இருந்தால் மட்டுமே அவரது நடிப்பு பெரிய அளவில் பேசபடும் அந்த வகையில் ரஜினியின் 90 காலகட்டத்தில் ஆஸ்தான வில்லனாக மாறி இருந்தவர்தான் நடிகர் ரகுவரன்.
இவரும், ரஜினியும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே இதுவரை மெகா ஹிட் படங்களாக தான் இருந்து வந்துள்ளன. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் மோதிக் கொள்ளும் காட்சி, பேசும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கொண்டாட வைக்கும் ஏனென்றால் ரஜினி அளவுக்கு ரகுவரனும் மாஸ் குரலில் பேசுவது வழக்கம்.சினிமா உலகைப் பொறுத்தவரை 70,80 கட்டத்தில் ஹீரோவை விட வில்லன் முரட்டுத்தனமாக இருந்தால் மட்டுமே படம் ஓடும் என இருந்தது.
அதை உடை தெரிந்தவர் ரகுவரன். ஆள் ஒல்லியாக இருந்தாலும் தனது குரல் வளத்தின் மூலம் ஹீரோக்களையே மிரளவைப்பார். அதை நாம் பல படங்களில் பார்த்திருப்போம் அப்படித்தான் ரஜினியின் பாட்ஷா, முத்து, அருணாச்சலம், ராஜா சின்ன ராஜா, சிவா, மனிதன், ஊர்காவலன் என பல படங்களில் ரஜினிக்கு நிகராக வில்லனாக மாஸ் காட்டியிருப்பார். ரகுவரன், ரஜினியுடன் பல படங்கள் பண்ணினாலும் ரஜினிக்கு நிகராக அப்போதைய காலகட்டத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் கமலுடன் மட்டும் இணைந்து ஒரு படம் கூட நடிக்காமல் போனார் ரகுவரன்.
சினிமா உலகில் நாம் நடைபெற்ற பெயர்போன கமலை பெரிய அளவில் பேசுகிறோம் அதே அளவிற்கு நடிப்பில் வாழ்ந்தவர் ரகுவரன் என்பதும் குறிப்பிடத்தக்கது எடுத்துக்காட்டாக இதை கூட சொல்லலாம். அரண்மனைக் காவலன் படத்தில் சர்வாதிகாரி கேரக்டரில் ரகுவரன் நடித்திருப்பார் இந்த படத்தில் ஒரு காட்சியில் விஜயகுமாரை அரிவாளால் வெட்டுவது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விஜயகுமாரும், ஸ்ரீவித்யாவும் ஆற்றில் பரிசலில் சென்று கொண்டு இருக்கும்பொழுது ரகுவரன் தண்ணீருக்குள் இருந்து எழுந்து விஜயகுமாரை வெட்டுவதுதான் சீன்.
தண்ணீருக்குள் இருந்து எழுந்து அருகில் பரிசில் வரும் போது ரகுவரன் அரிவாளால் வெட்ட வேண்டும் 7 முறை டம்மி அரிவாள் மிஸ்ஸாக ஒரிஜினல் அரிவாள் வேண்டும் என இயக்குனரிடம் கேட்டுள்ளார். அப்பொழுதுதான் எனக்கு ரியலாக நடிக்க வரும் என இயக்குனரிடம் கேட்டுள்ளார் பக்கத்திலிருந்த விஜயகுமார் அதிர்ச்சியாகி நீ ரியலா நடிக்கணும்னு என்னை ரியலா வெட்டிவிடாதே ரகு என சொல்லி உள்ளார். ரகுவரன் பிடிவாதமாக அரிவாள் வேண்டும் என இருக்க.. பக்கத்தில் இருந்த நடிகை ஸ்ரீ வித்யா கொஞ்சம் கண்டித்து பேசி மீண்டும் டம்மி அரிவாள் ரகுவரனுக்கு கொடுத்து நடிக்க வைத்தனர்.
அந்த கேரக்டரில் சிறப்பாக நடிக்க இப்படி ஒரு விஷயத்தை செய்தவர் ரகுவரன் என்பது குறிப்பிடதக்கது. மேலும் டப்பிங் பேசும் போதும் மிரட்டியவர் ரகுவரன் அதிகம் மெனக்கெடுவார் ஒரு வார்த்தையை குறைந்தது நூறு முறை வேற வேற பாணியில் பேசும் தன்மை கொண்டவராக அப்பொழுது வலம் வந்தவர் ரகுவரன் என்பது குறிப்பிடதக்கது. நடிப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடியவர் ரகுவரன். கமலுடன் இணைந்து நடிக்காமல் போனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே.. இரண்டு சிறப்பான நடிகர்கள் ஒரு படத்தில் மோதிக்கொள்ளும் போது அந்த படம் மிக சிறப்பாக இருக்கும். ஆனால் அதை காண முடியாமல் போனது.