மிரட்டல் வில்லன் அர்ஜுன் தாஸ் சினிமாவுக்கு வருவதற்கு முன் இந்த வேலையை தான் செய்து வந்தார்.! புகைப்படத்துடன் இதோ.

arjun das

சினிமாவுலகில் வில்லன்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் ஒரே படத்திலேயே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைவதோடு மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைப்பற்றுவது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்று இருந்து வருகிறது. அந்த வகையில் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர்.

அர்ஜுன் தாஸ் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் தனது கம்பீர குரல் மூலம் மிரட்டியிருப்பார் அதிலும் ஒரு இடத்தில் இவங்க தலையை எடுக்கிற உங்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் என்று தனது கம்பீரக் குரலால் பேசி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இவர் கைது படத்தை தொடர்ந்து தற்பொழுது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமிழ் சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக என்ன வேலை செய்து வந்தார் தெரியுமா.

அதனை பிரபல தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்ரீரஞ்சினி விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏதோ அர்ஜுன் தாஸ் மற்றும் சிவரஞ்சினி ஆகியோர் இருக்கும் புகைப்படம்.

arjun das
arjun das