தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விஜய் 65 படக்குழு.. இந்த விஷயத்தில் தல அஜித்தை ஓரம் கட்டிடாரு.

vijay
vijay

தளபதி விஜய் சமிப காலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் அதிரி புதிரி ஹிட் அடிப்பாதால் தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை அவர் எட்டியுள்ளார் மேலும் முன்னேறி செல்ல திறமை உள்ள இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து பயணிக்கிறார் அந்தவகையில் விஜயின் 64வது திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வேற லெவெலில் எடுத்திருந்தார்.

அடுத்ததாக இளம் இயக்குனரான நெல்சன் திலிப்குமார் உடன் முதல் முறையாக விஜய் கைகோர்த்து உள்ளதார். இதனால் விஜய்யின் 65வது படத்திற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறி உள்ளது மேலும் இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து டாப் நடிகர்கள்  நடிக்க உள்ளதால் படத்தின் ஒவ்வொரு சீனும் வேற அளவுகளில் இருக்கும் என கூறப்படுகிறது.

படத்தின் கதைக்கு ஏற்றவாறு பணத்தை அள்ளிக் கொடுக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வருவதால் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் பயப்படாமல் களத்தில் இறங்கி வேலை செய்ய ஆரம்பித்தார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க ரெடியானது. ஆனால் சூழ்நிலை சரியில்லாமல் மாற்றி அமைத்ததால் படக்குழு முற்றிலுமாக சூட்டிங்கை நிறுத்தியது அதன்பிறகு எப்ப தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சூழல் மாறுவதால் ஜூலை 1 முதல் விஜய்யின் 65வது படப்பிடிப்பு தொடங்கும் என கணிக்கப்படுகிறது.

இது தற்போது விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது மேலும் இந்த படத்திற்கான தலைப்பு வெகுவிரைவிலேயே படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது இதனால் டபுள் சந்தோஷத்தில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.