80,90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக காமெடியில் கலக்கி வந்த ஏராளமான நடிகர்கள் தற்பொழுது வயதான காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தன்னுடைய இளமை காலத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் தான் கவுண்டமணி.
இவருடைய நடிப்பு திறமையினால் இவருக்கு ஏராளமான மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் தமிழ் திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என திட்டவட்டமாக கூறிவிட்டார் ஏனென்றால் இவருக்கு மற்ற மொழி பேச தெரியாது என்பதற்காக அந்த திரைப்படங்களில் நடிக்க முடியாது என தவிர்த்து வந்தார் மேலும் தமிழில் கமல்,ரஜினி ,த்யராஜ் என ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கவுண்டமணி நடித்து வந்து மற்ற நடிகர்களுக்கு டஃப் கொடுத்து வந்தார் மேலும் இவருடைய திறமையினால் கதாநாயகராக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்தார். அந்த வகையில் தற்பொழுது இளம் நடிகரான சந்தானம் கவுண்டமணியை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என ஒரு மேடையில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது நான் இந்த வயதில் எந்த அளவிற்கு சுறுசுறுப்பாக கவுண்டர்களை போட்டு வருகின்றேனோ அதை மிஞ்சும் அளவிற்கு கவுண்டமணி சார் கவுண்டரில் பிச்சி உதருவார் என கூறியுள்ளார்.இவ்வாறு நன்றாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று ஹீரோவாகத் தான் நடிப்பேன் என முடிவு செய்ததால் பெரிதாக இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் ஹீரோவாக இவர் நடித்த திரைப்படங்களும் வெற்றி பெறவில்லை என கூறப்பட்டு வருகிறது.
மேலும் தற்பொழுது கவுண்டமணி திரைப்படங்களில் நடிப்பதற்கு வருவதாகவும் ஆனால் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடிக்க மாட்டேன் நிறைய காட்சிகளில் நடிப்பது இருந்தால் நான் நடிப்பேன் என கண்டிஷன் போட்டு உள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில் சிம்புவும் சரி என ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு சென்ற பொழுது அவரது காட்சிகள் பெரிதும் நீக்கப்பட்டு இருந்ததாம் எனவே அப்பொழுதே கோபத்தில் இருந்தாலும் அந்த படத்தில் நடித்துவிட்டு போய்விட்டார்.
இவரை சென்று பார்த்தாலும் அவர்களிடம் கண்டிஷன் போடுவதால் இவருக்கு பெரும்பாலும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.மேலும் தற்போது சிவகார்த்திகேயன் கவுண்டமணிவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைவுடன் அவரிடம் கதை சொல்லிவுள்ளார். அதற்கு அதே கண்டிஷன் போட்டு உள்ளார் அதற்கும் சரி என சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது விரைவில் இதனைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.