நடிகை ராசி கண்ணா தெலுங்கில் தொடர்ந்து கிளாமரையும் திறமையையும் அதிகமாக காட்டியே நடித்ததால் அங்கு வெகு விரைவிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து அசத்திய இவருக்கு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவிலும் நடிக்க அழைப்பு வந்தது அந்த வகையில் முதலில் இமைக்கா நொடி திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர்.
முதல் படத்திலேயே இவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் அதன்பின் ராசி கண்ணா ஜெயம் ரவியுடன் அடங்கமறு, சுந்தர் சியுடன் அரண்மனை 3, விஜய் சேதுபதியுடன் சங்க தமிழன் என தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டார்.
இப்பொழுது கூட இவரது கையில் சைத்தான் கா பச்சா, மேதாவி, சர்தார் ஆகிய படங்கள் இருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு படமும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவுலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிகொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆவார்.
நடிகை ராசி கண்ணா அவ்வபொழுது நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளுக்கு விருந்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராசி கண்ணா இதுவரை குவித்து வைத்துள்ள சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் அவரது சொத்து மதிப்பு சுமார் 37 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சினிமாவுலகில் கால்தடம் பதித்து குறைந்த வருடங்கள் ஆனாலும் இவ்வளவு கோடி அள்ளி உள்ளது மிகப்பெரிய ஒரு விஷயம் என கூறிவருகின்றனர்.