டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இதுவரை சேர்த்து வைத்துள்ள சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

dd
dd

சின்னத்திரையில் பல்வேறு விதமான ரியாலிட்டி ஷோக்களில் மக்களை கவர்வதற்கு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர் காரணமாக இருந்தாலும் அதை சிறப்பாக எடுத்துச் செல்வது தொகுப்பாளர் கையில்தான் இருக்கிறது.

அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி பல்வேறுவிதமான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது இதை தொகுத்து வழங்க பல நட்சத்திர தொகுப்பாளர்கள் இருந்தாலும் சினிமா பிரபலங்கள் என்று வந்துவிட்டால் விஜய் டிவி திவ்யதர்ஷினியை தான் தொகுப்பாளராக பல ஷோக்களை தொகுத்து வழங்க சொல்வார்கள் அவரும் அந்த நிகழ்ச்சியை வேற லெவெலில் தொகுத்து வழங்கி பிரபலப்படுத்துவார்.

அந்தவகையில்  காபி வித் டிடி, விருது விழா, படங்களின் சிறப்பு பார்வை, தொகுப்பு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் விஜய் டிவி தொலைக்காட்சி கடந்த பத்து வருடங்களாக அவரை தக்கவைத்துக் கொண்டு அழகு பார்த்து வருகிறது. டிடி என்கின்ற திவ்யதர்ஷினி சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியவர்.

பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி குடி கொண்டிருக்கிறார் இதனால் சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் ஜொலிக்கும் நட்சத்திரமாக டிடி என்கின்ற திவ்யதர்ஷினி வலம் வருகிறார். பல காலமாக சினிமா பிரபலங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்.

அதுபோல தற்போது சின்னத்திரை பிரபலம் திவ்யதர்ஷினி எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் 2021 ஆம் ஆண்டு வரை டிடியின் சொத்து மதிப்பு 3 லிருந்து 5 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.