நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருபவர் இவர் நடிப்பில் தற்பொழுது வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படம் வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது இந்த படத்தை காண தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கிறது என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அதற்கு காரணம் இரண்டு வருடங்களாக இந்த திரைப்படம் வெளியாகாமல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாகவும் பைக் சேஸிங் காட்சிகள் கார் சேஸிங் காட்சிகள் என பல காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே வலிமை படக்குழு சிறிய சிறிய காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் படக்குழு வெளியிட்ட வலிமை திரைப்படத்தின் டீஸரில் ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
வலிமை திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த முன்பதிவில் வலிமை திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது வலிமை திரைப்படம் மூன்று நாட்களுக்கு ஹவுஸ்ஃபுல் ஆகும் அளவிற்கு முன்பதிவு புக்கிங் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பே வலிமை திரைப்படத்தின் முழு டிக்கெட்டும் விற்று போனது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
அதேபோல் ரசிகர்களும் வலிமை படத்தை கொண்டாடுவதற்காக கட்டவுட் வைத்து தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.